Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, March 14, 2016

SNATTA சங்கம் நமது கூட்டணியில் இணைந்தது.


Image result for bsnleu logoImage result for allianceImage result for snatta logo



SNATTA சங்கம் எதிர்வரும் 7வது சரிபார்ப்பு தேர்தலில், நமது BSNLEU கூட்டணியில் இணைந்துள்ளது. 11.03.2016 அன்று நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூவும், SNATTA பொது செயலர் தோழர் அனுப் மூகர்ஜீயும், ஒப்பந்தத்தில் கையெழுத்துதிட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 

6 வது சரிபார்ப்பு தேர்தலில் SNATTA சங்கம்  நமது கூட்டணியில் இல்லை. இந்த 3 ஆண்டுகளில், BSNLEU சங்கம் நேரடி நியமன TTA தோழர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைத்ததற்காக, நமக்கு கொடுக்கப்பட்ட  அங்கீகாரமாக நாம் இதை பார்க்கிறோம்.  

ஒட்டுமொத்த BSNL ஊழியர்களின் எதிர்காலமும், நேரடி நியமன TTA தோழர்களின் எதிர்காலமும் நல்ல விதத்தில் அமைய, அவர்களின் வாழ்வையும், அவர்களின் நலனையும், காக்க BSNLEU தான் சிறந்த பாதுகாவலன் என்பதை இளம் படை உணர்ந்துள்ளார்கள். 

51 சதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று, நாம் வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. அது தற்போது கெட்டி படுத்தப்பட்டுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்