Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, March 1, 2014

மத்திய அரசு ஊழியர்கள்


மத்திய அரசு ஊழியர்கள்ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 90 சதவீதத்திலிருந்து100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன்அடைவார்கள்.

அகவிலைப்படியை உயர்த்தும் அரசின் திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இந்த உயர்வு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

7வது ஊதியக் குழுவின் ஆய்வு வரம்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுபொதுத் தேர்தலுக்கான அட்டவணை சிலதினங்களில் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் அகவிலைப்படியை உயர்த்தும் முடிவைகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்திருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரிலும் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி 90 சதவீதமாக மத்திய அரசு அறிவித்ததுஅது 2013-ம்ஆண்டு ஜுலை 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது.

அதேபோல் இப்போதும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதுமத்திய அரசு ஊழியர்களும்ஓய்வூதியர்களும் அடிப்படை ஊதியத்தில் 100 சதவீதம் என்ற விகிதத்தில் அகவிலைப்படிஅகவிலை நிவாரணம்பெறுவார்கள் என அரசின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படிஅகவிலை நிவாரணம் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 11,074.80 கோடி செலவாகும்ஜனவரி 2014லிருந்துபிப்ரவரி 2015 வரையிலான 14 மாத காலத்துக்கு அடுத்த நிதி ஆண்டில் ரூ. 12,920.60 கோடி செலவாகும்மத்திய அரசுஊழியர்களின் ஊதிய அமைப்பை நிர்ணயிப்பது தொடர்பான கொள்கைகளில் மாற்றம் செய்யப்படவேண்டும் என 7வதுஊதியக் குழு கருதினால் அதுபற்றி பரிசீலித்து உரிய மாற்றங்களை பரிந்துரைக்கும்.

18 மாதங்களில் ஊதியக் குழு பரிந்துரை

ஊதியக் குழு அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை அது வழங்கும்சில விவகாரங்களில்தமது பரிந்துரைகளை இறுதி செய்து முடித்தால் அப்போதே அதற்கான இடைக்கால அறிக்கையை அரசுக்கு அனுப்பும்.

அடிப்படை ஊதியத்துடன் 50 சதவீத அகவிலைப்படியை இணைப்பது பற்றி தனது இடைக்கால அறிக்கையில்ஊதியக்குழு பரிந்துரைக்க முடியும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்இரண்டும் இணைக்கப்பட்டால் மத்திய அரசுஊழியரின் ஒட்டுமொத்த சம்பளம் தோராயமாக 30 சதவீதம் உயரும் என்று தெரிகிறது.