தோழர்களே, 11.03.2014 அன்று புது டெல்லியில் அனைத்து ஊழியர் சங்கங்கள் (Unions and Associations of Non-Executives) சார்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. BSNLEU, NFTE BSNL, FNTO, BTEUBSNL, SNATTA, NFTBE, BTUBSNL பொது செயலர்கள் மற்றும் TEPU, BSNLATM. ITEF, பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நமது அகில இந்திய தலைவர் மற்றும் FORUM அமைப்பின் கண்வீணர் தோழர் V.A.N. நம்பூதிரியும் கூட்டத்தில் கலந்து கொண்டார். NFTE பொது செயலர் தோழர் சந்தேஷ்வர்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேங்கியுள்ள ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதில் உள்ள நிர்வாகத்தின் மெத்தன போக்கு கடுமையாக கண்டிக்கப்பட்டது. ஒன்று பட்ட போராட்டத்தில் செல்ல முடிவு செய்யபட்டது. இருப்பினும், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் உடனடி போராட்டத்தில் செல்ல முடியாத சூழல். எனவே பொது செயலர்கள் மட்டும் கலந்து கொள்ளும் தர்ணா போராட்டம் மட்டும் இந்த மாதத்தில் கார்பொரேட் அலுவகத்தில் நடத்துவது என முடிவு செய்ய பட்டுள்து. தொடர்ந்து போராட்டம் நடத்திட இருப்பதால் அனைத்து சங்கங்களயும் உள்ளடக்கி கூட்டு நடவடிக்கை குழு (Joint Action Committee) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,
தலைவர் தோழர் சன்தேஷ்வர்சிங், NFTE
கண்வீணர் தோழர் அபிமன்யு BSNLEU
பொருளர் தோழர் பாண்டே BTUBSNL
இணை கண் வீணர் ஜெயபிரகாஷ், FNTO மற்றும்
தோழர் பவன் மீனா SNATTA
இது தவிர அனைத்து சங்க பொது செயலர்கள் JAC அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பர்.
ஒற்றுமையுடன் கட்டபட்டுள்ள இந்த அமைப்பை சேலம் மாவட்டத்திலும் உருவாக்குவோம்.
ஒன்று படுவோம்! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!.
தோழமையுடன்,
E. கோபால் மாவட்ட செயலர் BSNLEU