மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் சென்ற கூட்டதிற்க்கு பிறகு நடைபெற்ற போராட்டங்கள், கூட்டங்கள், இயக்கங்கள் மற்றும் இந்த கூட்டத்தின் நோக்கம் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார்.
BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E. கோபால், சிறப்புரை வழங்கினார். தற்போதய அரசியல் சூழல், RGB தேர்தல், சேலம் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களக்கு பெற்று தந்த சலுகைகள், EPF/ESI பிடித்தம், ஒப்பந்ததாரர் மாற்றம், சில ஒப்பந்த ஊழியர்களின் தண்னிச்சையான செயல்பாடுகள் உள்ளிட்ட விசயங்களை விளக்கி பேசினார்.
BSNLEU மாவட்ட பொருளர் தோழர் C. செந்தில்குமார், மாவட்ட உதவி செயலர்கள் தோழர் P. தங்கராஜ், S. ஹரிஹரன், GM அலுவலக கிளை செயலர் தோழர் N. பாலகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
1. புதிய ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த ஊழியர்களக்கு PAYSLIP, ID Card, TA பில், வழங்க வலியுறுத்துவது.
2. ஏப்ரல் மாதத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் திரட்டி மையமான இடத்தில் கோரிக்கை சிறப்பு கூட்டத்தை நடத்துவது. மாநில செயலரை அந்த கூட்டதிற்க்கு அழைப்பது.
3. TNTCWU நடத்தும் போராட்டங்களில் மட்டும் கலந்து கொள்வது. தனி நபர் நடத்தும் இயக்கங்களில் பங்கேற்காமல் இருப்பது, அது பற்றிய தகவல்களை உடனுக்குடன் தலமைக்கு தெரிவிப்பது.
4. தண்னிச்சையான கட்டுப்பாடற்ற செயல்பாடுகள் காரணமாக பணி இழந்த ஊழியர்கள் சங்கத்தை முறையாக அணுகினால் அவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்க ஆவணம் செய்வது.
5. RGB தேர்தலில் BSNLEU கூட்டணி வெற்றி பெற கள பணியாற்றுவது.
6. பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் நல சிந்தனை உள்ள வேட்பாளர்கள் வெற்றி பெற உழைப்பது. மாற்று கொள்கைகளை ஆதரிப்பது.
TNTCWU மாவட்ட பொருளர் தோழர் P. செல்வம் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.