மோடி ஒரு சர்வாதிகாரி-கன்னட எழுத்தாளர்கள் கண்டனம்...
கர்நாடகத்தில் மக்களின் அன்பைப் பெற்றபிரபல கன்னட எழுத்தாளர்கள், பாரதீய ஜனதாகட்சியின் மதவெறிக்கும், அதை ஊட்டிவளர்க்கத் திட்டமிட்டுள்ள அவர்களது பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் எதிராககளமிறங்கி யுள்ளனர்.
குறிப்பாக ஞானபீட விருதுபெற்ற பிரபலகன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியும்,பிரபல திரைப்பட மற்றும் நாடக கலைஞரும்எழுத்தாள ருமான கிரிஷ் கர்னாட் ஆகியோர்நரேந்திர மோடியை கடுமையாகசாடியுள்ளனர்.பாஜக தனது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ள நரேந்திர மோடி, இந்தியநாகரிகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தல் என்றும், இந்தியாவின் பன்முககலாச்சாரத்திற்கு விடப்பட்டுள்ள சவால் என்றும் கூறியுள்ளார்.அத்துடன் அவர் நிற்கவில்லை,இன்னும் கடுமையான வார்த்தைகளில் சாடியுள்ள எழுத்தாளர் அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி ஒருசர்வாதிகாரி என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதே கடுமையுடன் எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், நரேந்திரமோடியையும் பாஜகவையும் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு, “மோடிபிரதமராக இருக்கும் நாட்டில் நான் வாழ விரும்பமாட்டேன்“ என்று எழுத்தாளர் அனந்த மூர்த்திகூறியிருந்தார்.அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.எனினும், மீண்டும் அதே கருத்தைவெளியிட்டுள்ள அவர், மோடிக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகதெரிவித்துள்ளார். இது கர்நாடக மாநில பாஜகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள்,எழுத்தாளர் அனந்தமூர்த்திக்கு எதிராக கூச்சலிடத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், மதவெறிக்கு எதிராக குரல் கொடுத்துள்ள கர்நாடகத்தின் இரண்டு பிரபலஎழுத்தாளர்களுக்கும் இதர எழுத்தாளர்களான வசுந்தரா பூபதி, மருளாசிதப்பா, ஜி.கே.கோவிந்தராவ்உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ----தீக்கதிர்.