கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். உமாநாத் இன்று 21.05.14 காலை காலமானார். அவருக்கு வயது 93.உடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த அவர் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று 21.05.14 காலை அவர் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுபினர்களில் ஒருவரான இவர் மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார். இவர் வழக்கறிஞர் நிர்மலாராணி,உ.வாசுகியின் தந்தை ஆவார்.
1962 முதல் 1965 வரை புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1977 முதல்1980 வரை நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது மறைவுக்கு நமது சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது.