புதிய தொலைத்தொடர்பு அமைச்சராக பாஜக மூத்த தலைவர்,மாண்புமிகு ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத், பதவி ஏற்றுள்ளார் அவர் தொழில் முறை வக்கீலாக இருக்கிறார். BJP மற்றும் NDA தேசிய செய்தி தொடர்பாளர் ஆக அவர் இருப்பது, ஊடக மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் சுமூகமான உறவை ஏற்படுத்தி இருந்தது.தொலை தொடர்பு துறை பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு இடையே சிக்கி இருப்பதால், அவர் சட்டம் அமைச்சகத்தையும் சேர்த்து கையாளவது மிகவும் பொருத்தமானது.நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் மனதார ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத் அவர்களை வரவேற்கிறது. உண்மையில் அவர் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நமது சங்கம் கேட்டு கொள்கிறது.