கிளை செயலர்கள் கூட்டம்
நமது மாவட்ட சங்கம் சார்பாக கிளை செயலர்கள்
கூட்டம் 10.06.2014 அன்று மாவட்ட சங்க
அலுவலகத்தில் நடை பெற்றது.
கூட்டதிற்க்கு தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர்
தலைமை தாங்கினார்.
தோழர் S. ஹரிஹரன் மாவட்ட உதவி செயலர்
அஞ்சலி உரை நிகழ்த்தினர்.
தோழர் E. கோபால் மாவட்ட செயலர் ஆய்படு பொருளை
அறிமுக படுத்தி விளக்க உரை வழங்கினார்.
16 கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள்
தோழர்கள் விஜயன், செந்தில்குமார், சண்முகம்
ஆகியோர் விவாதத்தில் பங்கு பெற்றனர்.
பின்னர் தோழர் E. கோபால் மாவட்ட செயலர்
தொகுப்புரை வழங்கினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. கிளை மாநாடுகள் நடத்தி முடிக்காத கிளைகள்
31.07.2014க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
2. ஜுலை முதல் வாரத்தில் ஆத்தூரில் செயற்குழுவை
கூட்டி மாவட்ட மாநாட்டுக்கு திட்டமிடுவது.
ஆகஸ்ட் 2014க்குள் மாவட்ட மாநாட்டை
நடத்தி முடிப்பது.
3. நன்கொடை நிலுவை வைத்துள்ள கிளைகள்
செயற்குழுவிற்க்குள் நன்கொடையை பூர்த்தி செய்வது.
4. புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை
வெற்றிகரமாக நடத்துவது.
மேற்க்கண்ட முடிவுகளை கிளை சங்கங்கள்
முழுமையாக அமுல்படுத்துமாறு
தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்.