27.06.2014 மாவட்ட செயற்குழு முடிவுகள்
நமது மாவட்ட செயற்குழு 27.06.2014 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் S. தமிழ்மணி
தலைமை தாங்கினார். தோழர் S. ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரை நிகழ்த்தினர். தோழர் M. சண்முகம், மாவட்ட உதவி செயலர், அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஒப்புதலுக்கு பின் மாவட்ட செயலர்
தோழர் E. கோபால் விவாத குறிப்பை அறிமுக படுத்தி
விளக்க உரை நிகழ்த்தினார்.
20 கிளை செயலர்கள், 18 மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று விவாதத்திலும் பங்கு பெற்றனர்.
விவாதத்திற்கு பின் மாவட்ட செயலர் விவாதத்திற்கு பதில் அளித்து தொகுப்பு உரை வழங்கினார்.
கூட்டத்தில் கிழ் கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டது.
1. மாவட்ட மாநாட்டை சேலத்தில் ஆகஸ்ட் 2014ல் நடத்துவது.
2. மாநில செயற்குழு முடிவின்படி, மாநில மாநாட்டு நிதி ரூ.250 வசூலிப்பது, மாவட்ட மாநாட்டு நிதியாக ரூ.250 வசூலிப்பது. [மொத்தம் ரூ.500 நன்கொடை]
3. 02.07.2014 பொது செயலர் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது.
4. 04.07.2014 ஒரு நாள் ஆர்பாட்டம், 11.07.2014 ஒரு நாள் தர்ணா போராட்டங்களை சக்தி மிக்கதாக நடத்துவது.
5. கிளை மாநாடுகள் நடத்தி முடிக்க வேண்டிய கிளைகள் ஜுலை 2014க்குள் நடத்தி முடிப்பது.
6. ஒவ்வொரு அலுவலகம்/தொலைபேசி நிலையத்திற்க்கு கிளை சங்கங்கள் நேரில் சென்று ஊழியர்களை சந்தித்து பிரச்சனைகளை உள்வாங்கி, அதை தொகுத்து கோட்ட பொறியாளரை சந்தித்து மகஜர் வழங்குவது
கிளை சங்கங்கள் செயக்குழு முடிவுகளை கறாராக அமுல் படுத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்,
E. கோபால், மாவட்ட செயலர்