Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, July 20, 2014

18.07.2014 கிளை செயலர்கள் கூட்ட முடிவுகள்


18.07.2014 அன்று "கிளை செயலர்கள்" கூட்டம் மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது. கூட்டத்திற்க்கு 
தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். 

தோழர் E. கோபால், மாவட்ட செயலர் ஆய்படு பொருள்களை அறிமுக படுத்தி கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். 

23 கிளை செயலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, விவாதத்தில் பங்கு பெற்றனர். 

கூட்டத்தில் கிழ் கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டது.

1. ஏழாவது மாவட்ட மாநாட்டு வரவேற்பு குழு அமைப்பு கூட்டத்தை, 23.07.2014 அன்று நடத்துவது. 

2. URBAN பகுதி கிளை செயலர்கள் தோழர்கள் சம்பத், பாலகுமார் ஆகியோரை தலைவர், செயலராக கொண்ட வரவேற்பு குழுவை அமைப்பது.

3. மாவட்ட மாநாட்டிற்கு ரூ. 250 மற்றும் மாநில மாநாட்டிற்கு ரூ. 250 ஊழியர்கிளிடம் வசூலிப்பது. 

4. நன்கொடை புத்தகம் மூலம் வெளி வசூல் செய்வது.

5. ஆகஸ்ட் 2014 இரண்டாவது வாரத்தில் அடுத்த செயற்குழு நடத்துவது, அதற்குள் குறைந்த பட்சம் 50 சதம் வசூல் செய்து, வரவேற்பு குழுவிற்க்கு உதவுவது.

6. JAC போராட்ட அறை கூவலை வெற்றிகரமாக நமது மாவட்டத்தில் அமுல்படுத்துவது.

7. சென்ற மாநாட்டிற்க்கும், இந்த மாநாட்டிற்க்கும் இடைப்பட்ட காலத்தில் நமது சங்கம் சாதித்த சாதனைகளை விளக்கி நோட்டிஸ் போடுவது. 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்.