நமது BSNLEU வின் மத்திய செயலக கூட்டம் 20.07.2014அன்று புது தில்லி K.G.போஸ் பவனில் நடைபெற்றது. தோழர் . V.A.N. நம்பூதிரி,தலைமையில் கொடியேற்றத்துடன். கூட்டம் தொடங்கியது. தோழர் . V.A.N.நம்பூதிரி, நமது சங்க கொடியை ஏற்றி வைத்தார்.அதன் பின் மறைந்த தலைவர்களுக்கு தியாகிகளுக்கு அஞ்சலிசெலுத்தும் முகத்தான். கூட்டத்தில்ஒரு நிமிடம் அமைதியாக நின்று தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அதன் பின் நிகழ்ச்சி ஒப்புதல்பெற்ற பிறகு, தோழர்.. பிஅபிமன்யூ, பொது செயலாளர், விவாதக் குறிப்பை வழங்கினார். தனதுஉரையில் பொது செயலாளர், செயலக கூட்டம் நடைபெறும் பின்னணியில்,நாட்டில் உள்ள களச் சூழ்நிலை குறித்தும், மத்திய அரசின் தொழிலாளர்விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை நரேந்திர மோடி அரசுதொடர்ந்துள்ள முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார். 19 நிர்வாகிகள் நடந்த செயலக கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிரச்சினைகளை தீர்விற்கு JAC தீர்வுகள் மற்றும் முடிவுகள் பற்றியும் விளக்கினார். அதன் பின் கீழ்க்கண்ட முடிவுகளை மத்திய செயலகம் எடுத்தது.
1.BSNL & MTNL இணைப்பை பொறுத்தவரை,MTNL நிறுவனத்தின் பங்குகள் விலக்கபட்ட பிரச்னை ,அந்த நிறுவனத்தின் கடன் சுமை , மற்றும் HR பிரச்னை ஆகியவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல்இணைப்பை ஏற்று கொள்ள முடியாது .
2. நெடு நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்காக கூட்டு போராட்ட குழு சார்பாக 07-08-2014 அன்று நடைபெற உள்ள ஆர்பாட்டத்தை பேட்ஜ் அணிந்து மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள்மிகுந்த சக்தியுடன் நடத்த வேண்டும் . JAC அமைப்பை மாநில மற்றும் மாவட்ட அளவில்உருவாக்கி அனைத்து NON EXECUTIVE சங்கங்களை அதில் இணைத்து வலிமைப்படுத்தவேண்டும் .
3.புதிய தாராளமய கொள்கை மற்றும் வகுப்பு நல்லிணக்கம் மற்றும் 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஒரு சில மாநிலங்களை தவிர அனைத்து மாநிலங்களிலும் கருத்தரங்கம்சிறப்பாக நடைபெற்றதை மத்திய செயலக கூட்டம் பாராட்டியது . இம் முயற்சி மாவட்டமட்டங்களிலும் தொடரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது .
4. ஸ்டோர் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை விஷயமாக மாநில செயலர்கள் மாவட்டசெயலர்களிடம் விபரங்களை சேகரித்து அதை மாநில தலைமை பொது மேலாளர் அவர்களிடம்சமர்ப்பித்து அதன் நகலை மத்திய சங்கத்திடம் சமர்பிக்க வேண்டும்.
5. நமது அனைத்திந்திய மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் மத்திய சங்கத்தால் அனுமதிக்கப்பட்டசார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
6. ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி BSNL காசுவல் மற்றும் ஒப்பந்தஊழியர் சம்மேளனம் உருவாக்கப்படாத மாநிலங்களில் உடனடியாக அதை உருவாக்க வேண்டும் .
7. அக்டோபர் 3 ஆம் தேதி சர்வதேச நடவடிக்கை தினத்தை வேலையின்மை எதிர்ப்பு தினமாகஅனுசரிக்க வேண்டும் .
8. டிசம்பர் 11 ஆம் தேதி தொழிலாளி வர்க்கத்தின் தலைவர் தோழர் K.G. போஸ்.அவர்களின் நினைவுநாளை பொருத்தமான முறையில் அனுஷ்டிக்க வேண்டும் .
9. ஏப்ரல் 7,8 தேதிகளில் டெல்லியில் K .G .போஸ் நினைவு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாகநடைபெற்ற தொழிற்சங்க வகுப்பு மிகுந்த பயன் உள்ளதாக இருந்தது என அதில் பங்கேற்றஅனைவரும் கூறியதை மத்திய செயலக கூட்டம் நினைவு கூர்ந்த்து .
தோழமையுடன், E. கோபால், மாவட்ட செயலர்