Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, July 25, 2014

23.07.2014 போனஸ் குழு கூட்டம்


புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட போனஸ் குழுக்கூட்டம்
 23/07/2014 அன்று டெல்லியில்  நடைபெற்றது. நமது பொதுச் செயலர்.தோழர்.பி .அபிமன்யு கலந்துகொண்டார். இலாபத்துடன்இணைந்த போனஸ் என்பது இல்லாமல் 
உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என்ற நமது கோரிக்கையின்அடிப்படையில் நிர்வாகம் தனது குறிப்பை  அளித்துள்ளது.
புதிய தரைவழி தொலைபேசி இணைப்புக்களை கொடுப்பது..தரைவழி இணைப்புக்களை தக்கவைப்பது..
புதிய அகன்ற அலைவரிசை BB   இணைப்புக்களை கொடுப்பது..
அகன்ற அலைவரிசை BB   இணைப்புக்களைதக்கவைப்பது..
WIMAX மற்றும் CDMA இணைப்புக்களை கொடுப்பது 
என்ற மேற்கண்ட பணிகளுக்காக 55 மதிப்பெண்கள் நிர்ணயிக்கபட்டுள்ளது.
தரைவழி,அகன்ற அலைவரிசை இணைப்புக்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுப்பது..
தரைவழி,அகன்ற அலைவரிசை பழுதுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றுவது..
போன்ற பணிகளுக்காக 35 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CM எனப்படும் CONSUMER MOBILITY கம்பியில்லா தொலைபேசி பகுதிக்கு 
10 மதிப்பெண்களேவழங்கப்பட்டுள்ளது.
விற்பனைப்பிரிவுபுதிய சேவைப்பிரிவுவணிகப்பிரிவு போன்றவை கணக்கில் 
எடுத்துக்கொள்ளப்படவில்லை.
மொத்தத்தில்...
பழுதுகளை உடனே அகற்றுதல்...இணைப்புக்களை உடனே கொடுத்தல்..என்ற பணிகளை 
மட்டும் நாம்செவ்வனே செய்தால் போனஸ் கிட்டும்.. 
என்பது நிர்வாகத்தின் தற்போதைய நிலைபாடு...
நமது நிலைபாடுஎன்ன? என்பது பற்றி நமது மத்திய சங்கம் கருத்து கோரியுள்ளது.