25.06.2014 அன்று மெய்யனூர் O/D மற்றும் TRA கிளைகள் இணைந்த மாநாடு LMRல் சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர்கள் கூட்டு தலைமை ஏற்க மாநில அமைப்பு செயலர் தோழர் S. தமிழ்மணி துவக்க உரை ஆற்றினார்.
மாவட்ட செயலர் தோழர் E. கோபால், சிறப்புரை வழங்கி அடுத்த ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்தார். மாவட்ட சங்க நிர்வாகிகள் விஜயன், தங்கராஜூ, ஷண்முகம், செந்தில்குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அடுத்த ஆண்டிற்கான O/D கிளை நிர்வாகிகளாக தோழர்கள் சேகர், சம்பத், சின்னசாமி முறையே தலைவர், செயலர், பொருளாராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
TRA கிளை நிர்வாகிகளாக தோழர்கள் மஹேந்திரன், பழனிமுத்து, செந்தாமரைக்கண்ணன் முறையே தலைவர், செயலர், பொருளாராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின்
புரட்சிகர நல்வாழ்த்துக்கள்.