மாநில அமைப்பு செயலர் தோழர் S. தமிழ்மணி, துவக்க உரை நிகழ்த்த, மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P. சண்முகம், எடப்பாடி கிளை செயலர் தோழர் G. நாராயணன், ஓய்வு பெற்ற மூத்த தோழர் K. P. ராஜமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட செயலர் தோழர் E. கோபால், சிறப்புரை வழங்கி, நிர்வாகிகள் தேர்தலையும் நடத்தி வைத்தார். மாநாட்டின் சிறப்பு அம்சமாக 5 தோழர்கள் NFTE BSNL சங்கத்தில் இருந்து விலகி நமது இயக்கத்தில் மாநில அமைப்பு செயலர், மாவட்ட செயலர் முன்னிலையில் இணைந்தனர்.
தோழர்.J. மணி, TM, தலைவராகவும், தோழர் M. கோபாலன், TTA, செயலராகவும், தோழர் L. வெங்கடேசன், TM பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும், நமது இயக்கத்தில் இணைந்த தோழர்களையும் மாவட்ட சங்கம் மனதார பாராட்டி வரவேற்கிறது. அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்.