Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, August 1, 2014

மகத்தான GM அலுவலக கிளை மாநாடு



GM அலுவலக கிளையின் 7 வது மாநாடு, பொது மேலாளர் அலுவலகத்தில் 31.07.2014 அன்று நடைபெற்றது.

மாநாட்டிற்கு தோழர். R. பொன்னுசாமி, கிளை தலைவர் தலைமை தாங்கினார். விண்ணதிரும் கோஷங்களை கொண்டலாம்பட்டி செல்வம் எழுப்ப, மூத்த தோழர் சண்முகம் சங்க கொடியை ஏற்றினார்.

மற்றும் ஒரு மூத்த தோழர் M.S. ராஜேந்திரன் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.  கிளை செயலர் தோழர். N. பாலகுமார்,  
அனைவரையும் வரவேற்று பேசினார்.

தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் S. தமிழ்மணி, மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினர். 

மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் பிரேமலதா, ஹரிஹரன், செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்ட செயலர் தோழர். E. கோபால், சிறப்புரை வழங்கினார். 

ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிழ் கண்ட தோழர்களை, தலைவர், செயலர், பொருளாராக கொண்ட பட்டியல் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி, 

தலைவர் -  தோழர் M.S. ராஜேந்திரன், SSS 
செயலர்  - தோழர் N. பாலகுமார், Sr.TOA 
பொருளர் -  தோழர் N. விஜயகுமார், Sr.TOA 

கிளை செயலர்கள் தோழர் ராஜன் (திருச்செங்கோடு ஊரகம்) காளியப்பன், (MAIN), சம்பத் (மெய்யனூர்), செல்வம் (கொண்டலாம்பட்டி), சித்ரசேனன் (குகை) ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். 

ஒய்வு பெற்றாலும், ஆர்வத்துடன் நமது முன்னாள் மாவட் சங்க நிர்வாகிகள் தோழர்கள் பழனி, மதியழகன் மாநாட்டில் கலந்து கொண்டது நல்ல அம்சம்.

இறுதியாக தோழர் N. விஜயகுமார், நன்றி கூற 
மாநாடு நிறைவு பெற்றது.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட சங்கம் அன்புடன் வரவேற்கிறது. அவர்களின் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்.