07.08.2014 அன்று நமது மாவட்டத்தில் JAC சார்பாக அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம் சிறப்பாக நடை பெற்றது. URBAN கிளைகளை மையப்படுத்தி MAIN தொலைபேசி நிலையத்தில்
சக்தி மிக்க ஆர்பாட்டம் நடை பெற்றது. கண்டன ஆர்பாட்டத்திற்க்கு NFTEBSNL மாவட்ட தலைவர் தோழர் சின்னசாமி தலைமை தாங்கினார்.
BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் S. தமிழ்மணி, NFTEBSNL தமிழ் மாநில உதவி தலைவர் தோழர். ராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
TEPU மாவட்ட செயலர் தோழர் P. கிருஷ்ணமூர்த்தி, SNATTA சார்பாக தோழர் ஸ்ரீநிவாசன், NFTEBSNL பொறுப்பு செயலர் தோழர்
G. வெங்கட்ராமன், BSNLEU மாவட்ட செயலர் மற்றும் JAC கன்வீனர் தோழர் E. கோபால், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
BSNLEU மாவட்ட பொருளர் தோழர் C. செந்தில்குமார் நன்றி உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 தோழர்கள் கலந்து கொண்டனர்.
MAIN தொலைபேசி நிலையம், ஆத்தூர், ராசிபுரம். வேலூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த படங்கள் கீழே பிரசுரிக்க பட்டுள்ளது.