Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, August 4, 2014

அநீதி களைய ஆர்ப்பரித்து போராடுவோம் !

05.08.2014 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டத்தில் House Keeping மற்றும் Cable பணிகளில் பணி புரியும் 140 ஒப்பந்த ஊழியர்களை அந்த மாவட்ட நிர்வாகம் எதேச்சிஅதிகார போக்கோடு 01.08.2014 முதல் பணி நீக்கம் செய்துள்ளது. ஒப்பந்ததாரர் Tender ரத்து செய்யப்பட்டதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக நிர்வாகம் காரணம் கூறுகிறது. ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்காததை எதிர்த்து கேட்டதால் இந்த பழி வாங்கும் நடவடிக்கை.

இந்த அநீதியை கண்டித்து, வேலூரில் இரண்டு மாவட்ட சங்கங்களும் இணைந்து 01.08.2014 முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்க்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் மதிய உணவு இடைவேளை ஆர்பாட்டம் நடத்த இரண்டு மாநில சங்கங்களும் அறைகூவல் கொடுத்துள்ளது.

நமது மாவட்டத்திலும், அனைத்து கிளைகளிலும், 05.08.2014 அன்று ஆர்பாட்டம் நடத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 
அநீதி கண்டு ஆர்ப்பரிப்போம்! 
வெகுண்டெழுந்து போராடுவோம்!! 

தோழமையுடன்,

E. கோபால், மாவட்ட செயலர் BSNLEU 
C. பாஸ்கர், மாவட்ட செயலர் TNTCWU