BSNLCCWF மற்றும் BSNLEU சங்கங்களின் அறைகூவல்படி 26.08.2014 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு மாலை நேர தர்ணா சிறப்பாக நடை பெற்றது.
TNTCWU மாநில செயலர் தோழர் C. வினோத்குமார் கலந்து கொண்ட இந்த போராட்டத்திற்கு, TNTCWU சேலம் மாவட்ட தலைவர் தோழர்
K. ராஜன் தலைமை தாங்கினார். TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கரன், உதவி செயலர் தோழர் M. சண்முகம், மாநில நிர்வாகி தோழர் T. செல்வம், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் C. செந்தில்குமார், S. ஹரிஹரன், ஆகியோர் போராட்ட உரை வழங்கினர்.
பின்னர் TNTCWU மாநில செயலர் தோழர் C. வினோத்குமார், BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் S. தமிழ்மணி, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E. கோபால், ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
போராட்டத்தை TNTCWU சேலம் மாவட்ட பொருளர் தோழர் P. செல்வம் நன்றி கூறி முடித்து வைத்தார். போராட்டத்தில் TNTCWU மற்றும் BSNLEU உறுப்பினர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.