Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, September 8, 2014

15.09.14 முதல்CGM(O)-ல் காலவரையற்ற உண்ணா விரதம்..16.09.2014 ஒரு நாள் வேலை நிறுத்தம்...

அருமைத் தோழர்களே! வேலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நமது BSNLலில் பணியாற்றிக்கொண்டு இருந்த 140 ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகம் திடீரென பணியில் இருந்து நிறுத்தி விட்டது. 


வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அத் தவறான நிலை பாட்டை மாற்றக்கோரியும், பணியிலிருந்து நிறுத்தப்பட்ட 140 ஒப்பந்த ஊழியர்களையும் மீண்டும் பணிக்கு எடுக்க கோரியும் வேலூர் மாவட்டத் தோழர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 


அதே தருணத்தில் நமது தமிழ் மாநிலம் முழுவதும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மாநில நிர்வாகம் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி மாதக்கணக்காகியும், ஒப்பந்த ஊழியர்கள் முழுமையாக பணிக்கு எடுக்கப்படத்தால் மாநில சங்கம் CGM அலுவலகத்தில் எதிர்வரும் 15.09.14 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. 


16.09.2014 அன்று தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய 2 மாநில சங்கங்களும் அறைகூவல் கொடுத்துள்ளன அநீதி களைய அணிதிரள்வோம்


தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்