சுமார் 600 ஊழியர்கள் நிரம்பியிருந்த அரங்கில் சேவை கருத்தரங்கம் முடிந்தவுடன், மாநாட்டை உணவு இடைவேளைக்காக ஒத்தி வைத்தோம். உணவு இடைவேளை முடிந்து மாநாடு மீண்டும் கூடியதும், பொருளாய்வு குழுவை துவங்கினோம். மாநில செயலர் தோழர் S. செல்லப்பா சிறிய உரை வழங்கி, மாநில உதவி செயலர் தோழர் M. நாராயணசாமி, மாநில சங்கம் சார்பாக மாநாட்டில் இருப்பார் என கூறி, அவசர பணிகள் காரணமாக விடை பெற்றார். தோழர் K.சீனிவாசன் மாநில பொருளர் வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டு, சார்பாளர்கள் விவாதம் நடை பெற்றது. வரவு செலவு கணக்கு தாக்கல் செய்ய பட்டது. இரண்டும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் மாநில உதவி செயலர் தோழர் M.நாராயணசாமி, சிறப்புரை வழங்கினார். மாவட்ட சங்கத்தின் முதல் மாநாடு தொடங்கி பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். நமது சங்கத்தின் வளர்ச்சியை பாராட்டினார். நமது செயல்பாடுகளை போற்றினார்.
மாநில சங்கம் சார்பாக நிர்வாகிகள் தேர்வை நடத்தி வைத்தார். நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட பொருளர் தோழர் C. செந்தில்குமார் நன்றி உரை வழங்க மாநாடு இரவு 7.30 மணி அளவில் இனிதாக முடிந்தது.