நம்முடைய மாவட்ட சங்கத்தின் 7வது மாவட்ட மாநாடு 19.09.2014 அன்று எழுச்சியுடன் துவங்கியது. முதல் நாள் நிகழ்வான மாவட்ட செயற்குழு, மாவட்ட தலைவர் தோழர் S.தமிழ்மணி தலைமையில் குஜராத்தி திருமண மண்டபத்தில் நடை பெற்றது.
தோழர் S. ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயலர் தோழர் E. கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாநாட்டு ஏற்பாடுகளை விளக்கி பேசினார்.
மாநாட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டு, விவாதித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாவட்ட பொருளர் தோழர் C. செந்தில்குமார் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். செயற்குழு ஏக மனதாக ஏற்றுக்கொண்டது.
பின்னர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.