வேலூர் மாவட்டத்தில் 140 ஒப்பந்த ஊழியர்களை தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்தது அந்த மாவட்ட நிர்வாகம். இதை கண்டித்து BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் இணைந்து, பல கட்ட இயக்கம் நடத்தினோம்.
பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்படாததால், 15.09.2014 முதல் கால வரையற்ற உன்னா நோன்பு மற்றும் 16.09.2014 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர்.
16.09.2014 அன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள், ஒய்வுதீயர்கள் மாநில தலைமை அலுவலகத்தில் திரண்டனர். நமது மாவட்டத்தில் இருந்து 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் பங்கு பெற்றனர்.
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையை பேச மாட்டோம் என சொல்லி வந்த மாநில நிர்வாகம் போராட்ட வீச்சை கண்டு, தன் முடிவை மாற்றி, நம் தலைவர்களை பேச்சுக்கு அழைத்தது.
பேச்சு வார்த்தையில் சுமூக உடன் பாடு ஏற்பட்டது. அதன்படி உடனடியாக 85 ஊழியர்கள் பணிக்கு எடுத்து கொள்ள படுவர். எஞ்சிய தோழர்கள் விரைவாக மீண்டும் பணிக்கு எடுத்துக்கொள்ளபடுவர். இது ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைத்த ஆகப்பெரிய வெற்றி.
களம் கண்ட அனைத்து தோழர்களுக்கும், நமது மாவட்ட சார்பாக கலந்து கொண்ட தோழர்களுக்கும் நமது நல் வாழ்த்துக்கள்
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்