20.09.2014 அன்று நமது சேலம் மாவட்ட சங்கத்தின் ஏழாவது மாவட்ட மாநாடு மிக எழுச்சியாக சேலம் குஜராத்தி சமாஜ் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. திட்டமிட்டபடி காலை 10.10 மணிக்கு மாநாட்டை துவக்கினோம். மாவட்ட தலைவர் தோழர் S.தமிழ்மணி தலைமை தாங்கினார். மாநில செயலர் தோழர் S. செல்லப்பா, மாநில உதவி செயலர் தோழர் M. நாராயணசாமி, மாநில பொருளர் தோழர் K. சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட உதவி தலைவர் தோழர் V. கோபால், தேசிய கொடி ஏற்ற, மூத்த தோழர் ஓமலூர் S. ராமசாமி சங்க கொடியை ஏற்றினார்.
தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தியபின், தோழர் S. ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால், அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். வரவேற்ப்புக்குழு சார்பாக அதன் பொது செயலர் தோழர் N. பாலகுமார் அனைவரையும் வரவேற்றார்.
பல்வேறு அலுவல்களுக்கு மத்தியில் நம் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட நேரத்திற்க்கு வருகை புரிந்து, மாநாட்டை துவக்கி வைத்து எழுச்சி மிகு உரை நிகழ்த்தினார் திருப்பூர் தெற்க்கு சட்டமன்ற உறுப்பினர் தோழர்
K. தங்கவேல். அரங்கு நிரம்பியிருந்த சூழ்நிலையில், சிறு சத்தமின்றி, அனைவரும் கவனிக்கும் வண்ணம் தோழரின் உரை சிறப்பாக இருந்தது. சர்வேதச சூழ்நிலை தொடங்கி, தேசிய நிலை, மாநில நிலை, அரசின் பொருளாதார கொள்கைகள், உழைக்கும் வர்கம் சந்திக்கும் சவால்கள், BSNL நிலைமை என அனைத்து விஷயங்களையும் விளக்கி, நேர்த்தியாக உரை வழங்கி மாநாட்டை துவக்கி வைத்தார் தோழர் K. தங்கவேல்.
பின்னர் நமது மாநில செயலர் தோழர் S. செல்லப்பா, மாநாட்டு சிறப்புரை வழங்கினார். நிறுவனத்தின் இன்றைய நிலை, மத்திய சங்கத்தின் இயக்கங்கள், மாநில சங்கத்தின் போராட்டங்கள், TNTCWU சங்கத்துடன் இணைந்த நமது போராட்டம், அதில் கிடைத்த மகத்தான வெற்றி, ஊழியர்களின் கோரிக்கைகள், போனஸ், LTC, BSNLMRS, என அனைத்து விஷயங்களையும் விளக்கி சிறப்பான உரை வழங்கினார். அப்போது, அரங்கு நிரம்பி பல தோழர்கள் வெளியில் நிற்க்க வேண்டிய நிலை.