நமது மாநாட்டின் ஒரு நிகழ்வாக சேவை கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். கருத்தரங்கிற்க்கு தோழர் S.தமிழ்மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால் அனைவரையும் வரவேற்று சேவை மற்றும் நிதி மேம்பாடு சம்மந்தமான நமது தரப்பு கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன் மொழிந்தார்.
BSNL சேலம் மாவட்ட முதன்மை பொது மேலாளர் உயர்திரு. S. மணி, கருத்தரங்கில் கலந்து கொண்டு, சேலம் மாவட்டத்தின் நிதி நிலைமையை விளக்கினார். சேவை மேம்பாட்டிற்க்கு ஊழியர்கள் நல்க வேண்டிய பணிகளை பட்டியலிட்டார். நமது மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். நமது மாநில உதவி செயலர் தோழர் M. நாராயணசாமி, கருத்துரை வழங்கினார். BSNL சேலம் மாவட்ட துணை பொது மேலாளர்கள் திருவாளர்கள் குமரவேல், முத்துசாமி ஆகியோர் வாழ்த்தி பேசி சேவை மேம்பாடு சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கினர்.