Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, October 15, 2014

ஒப்பந்த ஊழியர்கள் கார்பரேட் அலுவலகம் நோக்கி வரலாற்று சிறப்பு மிக்க பேரணி





BSNLCCWF - ஒப்பந்த ஊழியர் சங்க மத்திய சம்மேளனம் சார்பாக, 15.10.2014 அன்று டில்லியில் கார்பரேட் அலுவலகம் நோக்கி சிறப்பான பேரணி நடத்தப்பட்டது. நாடு முழுவதுலுமிருந்து சுமார் 1000 ஒப்பந்த ஊழியர்கள் திரளாக பேரணியில் பங்கேற்றனர். 

உழைக்கும் வர்கத்தின் விடிவள்ளியான CITU அமைப்பின் தலைவர் தோழர் A.K. பத்மநாபன், பேரணியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். BSNLCCWF மற்றும் BSNLEU சங்கத்தின் தலைவர் தோழர் V.A.N. நம்பூதிரி, BSNLEU பொது செயலர் தோழர் P. அபிமன்யு, BSNLCCWF பொது செயலர் தோழர் தபஸ் கோஷ் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். 

நமது மாவட்டத்திலிருந்து TNTCWU மாவட்ட செயலர் தோழர் பாஸ்கரன், மாநில நிர்வாகி தோழர் செல்வம் உட்பட 4 தோழர்கள் பங்கேற்றனர். தோழர்களுக்கு இரண்டு மாவட்ட சங்கங்களின் பாராட்டுக்கள்.