அகில இந்திய மாநாட்டின் 2ம் நாள் (07.11.2014) நிகழ்வில் சிறப்பான மகளிர் கருத்தரங்கம் நடை பெற்றது. நூற்றுகணக்கான பெண் ஊழியர்கள் திரளாக பங்கேற்ற இந்த கருத்தரங்கில் தோழர் ஜக்மதி சங்குவான், அகில இந்திய பொது செயலர், ஜனநாயக மாதர் சங்கம் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
முன்னதாக, காலையில், சார்பாளர் மாநாடு முறைப்படி துவங்கியது. பொது செயலர் தோழர் அபிமன்யு சமர்ப்பித்த செயல்பாட்டு அறிக்கை மீது விவாதம் துவங்கியது.