20.11.2014 அன்று JAC சார்பாக, ஒரு நாள் வேலை நிறுத்தம் தொடர்பாக மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சேலம் MAIN, ஆத்தூர், ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, மேட்டூர் கிளைகளில் நடை பெற்றது.
சேலம் MAIN தொலைபேசி நிலயத்தில் அனைத்து URBAN கிளைகள் சார்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு தோழர்கள் N. பாலகுமார் BSNLEU மற்றும் G. வெங்கட்ராமன், NFTEBSNL கூட்டு தலைமை தாங்கினார்.
கோரிக்கைகளை விளக்கி தோழர் E. கோபால், மாவட்ட செயலர், BSNLEU, தோழர் C. பாலகுமார், மாவட்ட செயலர் NFTEBSNL,
தோழர் C. கமலக்கூத்தன், மாவட்ட செயலர் NUBSNLW (FNTO) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.தோழர் C. செந்தில்குமார், மாவட்ட பொருளர் BSNLEU நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் 15 பெண்கள் உட்பட, 160 தோழர்கள் பங்கு பெற்றனர். ஆத்தூர், ராசிபுரம் கிளைகள் ஆர்ப்பாட்ட படங்களும் கீழே காணலாம்.