சேலம் மாவட்ட JAC சார்பாக, ஒரு நாள் வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கி மாவட்டம் முழுவதும் 3 மையங்களில் சிறப்பு கூட்டம் நடத்த முடிவு எடுக்க பட்டது. அதன்படி, முதல் சிறப்பு கூட்டம் 21.11.2014 அன்று நாமக்கலில் நடை பெற்றது.
கூட்டதிற்க்கு தோழர்கள் V. கோபால், BSNLEU, சம்பத் NFTEBSNL, கூட்டு தலைமை தாங்கினார்கள்.
BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், கனகராஜ், NFTEBSNL மாவட்ட சங்க நிர்வாகிகள் ஹரி கிருஷ்ணன், கஜேந்திரன் கருத்துரை வழங்கினார்கள்.
BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால், NFTEBSNL மாவட்ட செயலர் தோழர் C. பாலகுமார், BSNLEU மாநில உதவி செயலர் தோழர் S. தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார்கள்.
10 பெண்கள் உட்பட 120 தோழர்கள் பங்கு பெற்றனர். NFTEBSNL கிளை செயலர் நன்றி கூறினார்.