சேலம் மாவட்ட JAC முடிவின்படி 2வது சிறப்பு கூட்டம் திருச்செங்கோட்டில் 24.11.2014 அன்று நடை பெற்றது. தோழர்கள் தங்கராஜ், BSNLEU மற்றும் சுப்ரமணி NFTEBSNL கூட்டு தலைமை தாங்கினார்கள். தோழர் சதாசிவம் NFTEBSNL வரவேற்புரை வழங்கினார்.
தோழர்கள் செந்தில்குமார், மாவட்ட பொருளர் BSNLEU மற்றும் வெங்கட்ராமன், மாவட்ட உதவி தலைவர் NFTEBSNL வாழ்த்துரை வழங்கினார்கள்.
NFTEBSNL மாவட்ட செயலர் தோழர் C. பாலகுமார் மற்றும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால் கருத்துரை வழங்கினார்கள். NFTEBSNL மாநில உதவி தலைவர் தோழர் P. ராஜா மற்றும் BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் M. பாபு சிறப்புரை வழங்கினார்கள். தோழர் M. ராஜலிங்கம் BSNLEU நன்றி கூற கூட்டம் முடிவு பெற்றது. கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.