Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, November 7, 2014

எழுச்சியுடன் துவங்கியது 7 வது அகில இந்திய மாநாடு



வரலாற்று சிறப்பு மிக்க நகரமான கொல்கத்தாவில் நமது அகில இந்திய சங்கத்தின் 7வது மாநாடு மிக எழுச்சியுடன் 06.11.2014 அன்று துவங்கியது. தேசிய கொடியை நமது தலைவர் தோழர் நம்பூதிரி ஏற்ற, சங்க கொடியை நமது பொது செயலர் தோழர் அபிமன்யு ஏற்றி வைத்தார். 
தியாகிகள் அஞ்சலிக்கு பின் வரவேற்பு குழு தலைவர் தோழர் சிசிர் பட்டாச்சார்ஜீ, அனைவரயும் வரவேற்றார். CITU அகில இந்திய தலைவர் தோழர் A.K. பத்மநாபன் மாநாட்டை துவக்கி வைத்து உரை ஆற்றினார். 
உணவு இடைவேளைக்கு பின் பெரும் திரள் பேரனியும், அதனை தொடர்ந்து பொது கூட்டமும் முதல் நாள் நிகழ்வாக நடைபெற்றது. நமது மாவட்டத்திலிருந்து 23 தோழர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்