Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, November 20, 2014

அசத்தலான ஆத்தூர் செயற்குழு



18.11.2014 அன்று ஆத்தூர் அண்ணா கலை அரங்கில் நமது சேலம் மாவட்ட செயற்குழு வெகு சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்க்கு தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக சங்க கொடியை கொள்கை கோஷங்களுக்கு இடையே ஆத்தூர் மூத்த தோழர் K.A. கிருஷ்ணன் ஏற்றி வைத்தார். ஆத்தூர் RURAL கிளை செயலர் தோழர் G.R. வேல் விஜய் அஞ்சலி உரை நிகழ்த்த, மாவட்ட உதவி தலைவர் தோழர் V. சின்னசாமி அனைவரையும் வரவேற்றார். 
அய்படு பொருள் ஏற்புக்கு பின் தோழர் M. பாபு, மாநில அமைப்பு செயலர், செயற்குழுவை துவக்கி வைத்தார். வேலை நிறுத்த கோரிக்கைகள், அரசாங்க நிலைபாடு, உள்ளிட்ட விசயங்களை விளக்கி பேசினார். 
தோழர் E. கோபால், மாவட்ட செயலர், அய்படு விசயங்களை அறிமுகப்படுத்தி உரை வழங்கினார். மாநில உதவி செயலர் தோழர் S. தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார்.
பின்னர் நடை பெற்ற விவாதத்தில் 35 தோழர்கள் பங்கு பெற்றனர். கூட்டத்தில் கீழ் கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டது. 
1. 27.11.2014 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது. 
2. அனைத்து கிளைகளிலும் தயாரிப்பு கூட்டங்கள் நடத்துவது. 
3. பொறுப்பு மாவட்ட நிர்வாகிகள் கிளைகளில் நடை பெறும் கூட்டத்தில் கலந்து கொள்வது. 
4. JAC ஒப்புதலுடன் 3 மையங்களில் சிறப்பு கூட்டம் நடத்துவது. 
5. 14.12.2014 அன்று 7 வது மாவட்ட மாநாடு வரவேற்ப்பு குழு கூட்டம் நடத்தி முடிப்பது. 
6. 05.12.2014 க்குள் கிளைகள் தல மட்ட கவுன்சில் மற்றும் பணி குழு கோரிக்கைகளை மாவட்ட சங்கத்திற்க்கு வழங்குவது

இறுதியாக, ஆத்தூர் URBAN கிளை செயலர் தோழர் T. செல்வராஜ் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. 
விரிவான விளம்பரம், பேருந்து நிலையத்திற்க்கு மிக அருகில் அமைதியான மண்டபம், அன்பான உபசரிப்பு, அறுசுவை அசைவ உணவு, தோழர்களின் மகத்தான பங்கேற்ப்பு என ஆத்தூர் தோழர்கள் அசத்திவிட்டார்கள். அருமையான ஏற்பாடுகளை செய்த ஆத்தூர் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆத்தூர் URBAN மற்றும் RURAL இரண்டு கிளைகளுக்கும், மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள் மற்றும் நெஞ்சு நிறை நன்றிகள்.
தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்