விடுதலை பாடிய வீரக்கனல்.
சமத்துவ சமுதாயம் படைக்கச்
சமர்புரிந்த சிந்தனைச் சிற்பி.
உலகுக்கு ஒளியூட்டும் புதிய இந்தியா
உன்னத வாழ்வளிக்கும்
மண்சொர்க்கம்
காண விழைந்திட்ட கவியோகி
மூட நம்பிக்கையின் முழுப்பகையாளி
தன்னம்பிக்கையின் தழல் ஒளி
அறிவில் பரந்த அகண்ட வெளி
அன்பில் விரிந்த பார்வை விழி
விஞ்ஞான வெளிச்சத்தின் ஒளிக்கீற்று
பெண்கல்வி, பெண் விடுதலை பேசிய
பெருந்தகை.
தமிழன் எனும் மரபில் கால்
ஊன்றிமானுட சமுத்திரமாய் விரிந்து
பரந்தவன்மதவெறி அண்டா மனித நேயன்
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுதுக்கும் பொதுவுடைமை
ஒப்பில்லாத சமுதாயம் உலகுக்கு
ஒரு புதுமை என்ற ஞானி
சொல்லில் புதிது கவியில் புதிது
மனதில் புதிது மனிதனில் புதிது
வாழ்வில் புதிது வழிகாட்டலில் புதிது
புதிது புதிது புதிதாய் வாழ்ந்த
பாரதி நீயும் எந்நாளும் புதிது
இன்று பாரதி பிறந்தநாள்