Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 12, 2014

கேடர் பெயர் மாற்ற குழு கூட்ட முடிவுகள்


கேடர் பெயர் மாற்றக் குழுவின் கூட்டம் 
10-12-2014 அன்று நடைபெற்றது. 
நமது BSNLEU சங்கத்தின் சார்பில் பொது செயலர் தோழர். அபிமன்யு
மற்றும் தோழர்கள். பல்பீர் சிங், அனிமேஷ் மித்ரா, 
NFTE சங்கத்தின் சார்பில் பொது செயலர். 
தோழர். சந்தேஷ்வர் சிங் மற்றும் தோழர்.மகாவீர் 
ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Sr.TOA மற்றும் TTA ஆகியவற்றின் பெயர் மாற்றம் தொடர்பாக
ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது. 
TTA கேடருக்கு JUNIOR ENGINEER என்ற பெயர் வேண்டும் 
என ஊழியர் தரப்பு கேட்டது. 
நிர்வாக தரப்பில் அதிகாரிகளுக்குள் விவாதித்து விட்டு அடுத்த கூட்டத்தில் பதில் அளிப்பதாக  கூறியுள்ளது.

Sr.TOA கேடரை பொறுத்த வரை ஊழியர்களின் 
கோரிக்கைகளான ASSOCIATE OFFICER, MANAGER, 
EXECUTIVE ஆகிய கோரிக்கைகளை பரிசீலிக்க 
நிர்வாக தரப்பு தயாராக இல்லை. 

ஊழியர் தரப்பு தோழர்கள் தங்களுக்குள் 
விவாதித்து விட்டு துவக்க நிலையில் 
உள்ள Sr.TOAக்களுக்கு TELECOM ASSOCIATE என்றும்
NE 9,10,11 மற்றும் 12 ஆகிய ஊதிய விகிதங்களில் 
உள்ளவர்களுக்கு SUPERINTENDENT என்றும் 
தர வேண்டும் எனக் கேட்டனர். 

இதையும் நிர்வாக தரப்பில் அதிகாரிகளுக்குள் 
விவாதித்து விட்டு அடுத்த கூட்டத்தில் பதில் 
அளிப்பதாக தெரிவித்தனர்.

அடுத்த கேடர் பெயர் மாற்றக் குழுவின் கூட்டம் 
08-01-2015 அன்று நடைபெறும்.

தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்