தமிழ் திரையுலகில் இயக்குனர் சிகரம் எனப் போற்றப்பட்ட கே.பாலசந்தர்
உடல்நலக்குறைவால் செவ்வாயன்று காலமானார். அவருக்கு வயது 84.
திருவாரூர்மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் 1930ல் பிறந்த
கே.பாலசந்தர் தமிழில்
மிகச்சிறந்தபடங்கள் பலவற்றை இயக்கியவராவார்.
‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘எதிர்நீச்சல்’, ‘தண்ணீர் தண்ணீர்’,
‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’,
‘சிந்து பைரவி’ போன்றவைத் தமிழ் திரையுலகில் அவரின் சிறந்த
படைப்பு களாகப்இன்றும் போற்றப்படுகிறது.
இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர்,
மேடைநாடக இயக்குனர், தொலைக் காட்சி நாடகத் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை
படைத்த கே.பாலச்சந்தர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட
பல பிரபலங்களைஅறிமுகம்செய்தவர்.
திரைப்படத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக
இந்தியாவின்உயரிய விருதான “பத்மஸ்ரீ”, விருது
வழங்கி கௌரவிக்கப்பட்டார்.ஒரு மேடைநாடககலைஞராகத்
தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி,தமிழ்த் திரைப்படத்துறையில்
அரைநூற்றாண்டுகளையும் கடந்து,சுமார்நூற்றுக்கும்
மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, மாபெரும்
இயக்குனராக விளங்கிய கே. பாலச்சந்தர் உடல் நலக்குறைவு
ஏற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவ
மனையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக் கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சைப்பலனின்றிசெவ்வாயன்று காலமானார்.
அன்னாருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
வருத்தங்களுடன் E. கோபால், மாவட்ட செயலர்