சேலம் மாவட்ட FORUM முடிவின்படி "BSNL-யை பாதுகாக்கும்"
இயக்கத்தின் 2வது சிறப்புக் கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம்
நாமக்கல் நகரில் 24-12-2014 புதன்கிழமை அன்று நாமக்கல்
தொலைபேசி நிலைய வாயிலில் மிக எழுச்சியுடன் துவங்கியது.
இந்தசிறப்புக் கூட்டத்திற்கு தோழர்கள். V.கோபால் (BSNLEU),
G.வெங்கட்ராமன் (NFTE-BSNL), K.நல்லமுத்து (SNEA), K.மாதேஸ்வரன்
(AIBSNLEA) ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினார்கள்.
BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர். P.கனகராஜ்
அனைவரையும் வரவேற்று பேசினார்.
நாமக்கல் மாவட்ட CITU மாவட்ட செயலர் தோழர்.
N.வேலுசாமி முதல் கையெழுத்துத்திட்டு இயக்கத்தை துவக்கி
வைத்து எழுச்சி உரை ஆற்றினார்.
AIBSNLEA மாவட்ட செயலர் தோழர். M.சண்முகசுந்தரம்,
SNEA மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். D. ஜெயபிரகாஷ்,
NFTE-BSNL மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்,
BSNLEU மாவட்ட செயலர் தோழர். E. கோபால்,
BSNLEU மாநில உதவி செயலர் தோழர். S.தமிழ்மணி
ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியாக NFTE-BSNL நாமக்கல் ஊரக கிளை செயலர் தோழர்.
K. கனேசன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
இக்கூட்டத்தில் சுமார் 100 ஊழியர்கள் (10 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட) பங்கேற்றனர். "கையெழுத்து இயக்கம்" துவங்கிய
ஒரு மணி நேரத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள்
பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன.