Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, December 20, 2014

மௌனச் சகுனிகள்


தாய்மொழி தமிழ் தெரியும்.ஆங்கிலமும் கூட கற்றுக்கொண்டோம்.கார்ப்பரேட் முதலாளிகள் எந்த மொழியில் பேசினாலும் வார்த்தைகளுக்கான பொருள் புரியவே இல்லை…சுரண்டலைப் போல்.

மனிதநேயம் இருப்பதால்தான் விருப்ப ஓய்வாம்!உருப்போட்ட வார்த்தைகளில்ரத்த வாடை.

15 வயது இளம் பெண்ணை20ஆவது திருமணம் செய்து கொள்ளும்காமுகனுக்கும்..19 வயது இளைஞர்களைவேலைக்கு அமர்த்தி 25 வயதில்தூக்கியெறியும் முதலாளித்துவத்திற்கும்என்ன வித்தியாசம்?முன்னது காமவெறி..பின்னது லாபவெறி..

நேற்று நோக்கியா…இன்று ஃபாக்ஸ்கான்..நாளை…?

ராஜராஜனின் ஆயிரம் ஆண்டுபிறந்த நாள் கொண்டாட்டத்தின் வாள்(ய்) வீச்சு ஆட்சியாளர்கள்...…கார்ப்பரேட் ஷூக்களின் முன்மண்டியிட்டுமௌனம் சாதிக்கிறார்கள்

பாண்டவர் ஐவருக்காகமகாபாரதப் போர்…சுற்றம் பார்க்காதே!கிருஷ்ணனின் கீதா உபதேசம்.
பல்லாயிரம் இளம் தொழிலாளர்களுக்குஎன்ன உபதேசம்?விருப்ப ஓய்வா?

அப்படியானால்.. ஆட்சியாளர்களே…நீங்கள்..கார்ப்பரேட் துரியோதனன்களுக்குசகுனியல்லவா?...
தொழிலாளரின் மானம் காக்கஎந்த கிருஷ்ணனும் வரப்போவதில்லை…போராட்டம்... போராட்டம் தவிர...