Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 12, 2014

கோரிக்கை தினம் - FORUM சார்பாக 11.12.2014 - ஆர்பாட்டம் - செய்தி - படங்கள்



11-12-2014 அன்று BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் 
அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக BSNL புத்தாக்கம்தொடர்பாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சேலம் மெயின் மற்றும் 
அனைத்து ஊரக கிளைகளிலும் நடை பெற்றது.
 
சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் அனைத்து 

நகர கிளைகள் சார்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு தோழர்கள். 
தமிழ்மணி BSNLEU, வெங்கட்ராமன் NFTE-BSNL, நாகராஜ் SNEA,
கணபதி AIBSNLEA ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர். 
 
கோரிக்கைகளை விளக்கி தோழர். கோபால், மாவட்ட செயலர்

BSNLEU, தோழர். பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL, 
தோழர். சம்பத், மாவட்ட தலைவர் SNEA, தோழர். சண்முக சுந்தரம், மாவட்ட செயலர் AIBSNLEA, மற்றும் தோழர். வேணு கோபால்,
அகில இந்திய தலைவர் AIBSNLEA ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். தோழர். நாராயணகுமார், மாநில செயற்குழு
உறுப்பினர் SNEA நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட,
160 தோழர், தோழியர்கள் பங்கு பெற்றனர்.

சேலம் MAIN, ஆத்தூர், திருச்செங்கோடு, ராசிபுரம், பக்திகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட படங்கள். 
தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்