பூவுலகில் மனிதனை மனிதன் சுரண்டாத சோசலிச சமூகத்தை முதன் முதலாக அமைத்த ரஷ்யப் புரட்சிக்கு தலைமையேற்ற மாமேதை லெனின் நினைவு நாள் இன்று.
உலகில் முதல் சோசலிச சமூகத்தைப் படைப்பதில் பெரும் பங்காற்றிய லெனின் மறைந்து 91 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
எனினும் உழைக்கும் மக்களுக்கும் அவர்களின் விடுதலைக்கு போராடும் பொதுவுடமை போராளிகளுக்கும் லெனின் வாழ்வும் பணியும் இணையில்லா வழிகாட்டியாக திகழ்கிறது.