நாடு தழுவிய 3 நாள் தர்ணா போராட்டத்தை நமது மாவட்டத்தில் முதல் இரண்டு நாட்கள் பொது மேலாளர் அலுவலகம் முன்பும்,
மூன்றாம் நாள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பும் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, முதல் நாள் தர்ணா போராட்டம் 06.01.2015 அன்று பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
போராட்டத்திற்க்கு தோழர்கள் தமிழ்மணி (BSNLEU), சின்னசாமி (NFTEBSNL),
கணபதி (AIBSNLEA), சம்பத் (SNEA),
அன்பழகன் (TEPU) ஆகியோர்
கூட்டு தலைமை தாங்கினர்.
தர்னாவை AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர் P. வேணுகோபால், துவக்கி வைத்தார்.
தோழர்கள் M.R. தியாகராஜன், (SNEA),
M. சண்முகசுந்தரம் (AIBSNLEA),
P. கிருஷ்ணமூர்த்தி (TEPU), C. பாலகுமார் (NFTEBSNL), E. கோபால், (BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
அதேபோல் தோழர்கள் ஜெயப்பிரகாஷ் (SNEA), பார்த்தசாரதி (AIBSNLEA), வெங்கட்ராமன் (NFTEBSNL), ஹரிஹரன் (BSNLEU) ஆகியோரும் கருத்துரை வழங்கினார்கள்.
போராட்ட பந்தலில் திருச்செங்கோடு கோட்டத்தில் பெறப்பட்ட 2500 கையெழுத்துக்கள் முதல் தவணையாக அந்த பகுதி தோழர்களால்
FORUM (மாவட்ட) தலைவர்களிடம் வழங்கப்பட்டது.
தர்னாவில், 150 தோழர்கள் (20 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர்.