17.02.2015 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் நம்முடைய மாவட்ட செயற்குழு சிறப்பாக நடை பெற்றது. கூட்டத்திற்க்கு தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமை தங்கினார்.
மாவட்ட பொருளர் தோழர் C. செந்தில் குமார் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட செயலர் தோழர் E. கோபால், கூட்டத்தின் ஆய்ப்படு பொருட்களை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
36 செயற்குழு உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கு பெற்றனர். விவாதம் செழுமையாக இருந்தது.
7வது மாவட்ட மாநாட்டு வரவேற்ப்பு குழு வரவு செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டு, ஏற்று கொள்ள பட்டது. வரவேற்பு குழு கௌரவிக்க பட்டபின், முடித்து வைக்க பட்டது.
விவாதத்தில் வந்த விசயங்களை விளக்கி
மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கிய பின், தோழர் S. ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
கூட்டத்தில் கீழ் கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டது.
1. சர்வதேச மகளிர் தினம் 08.03.2015 அன்று
அனைத்து கிளைகளிலும் சிறப்பாக அனுசரிக்க வேண்டும். மாவட்டம் தழுவிய சிறப்பு கூட்டம் நாமக்கலில், 07.03.2015 அன்று நடத்துவது.
2. BSNLEU அமைப்பு தினம் 22.03.2015 அன்று அனைத்து கிளைகளிலும் எழுச்சியுடன் சக்திக்கு ஏற்ப, சமூக நல உதவிகள் செய்து கொண்டாடுவது.
3. 17.03.2015 முதல் நடைபெற உள்ள கால வரையற்ற வேலை நிறுத்தத்தை FORUM அமைப்பில் ஆலோசித்து, வெற்றிகரமாக்குவது.
4. அடுத்த செயற்குழுவை 29.03.2015 அன்று ஓமலூரில் முப்பெரும் விழாவாக சிறப்பாக நடத்துவது.
தோழர்களே செயற்குழு முடிவுகளை வெற்றிகரமாக அமுல்படுத்துமாறு
தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்