Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, February 10, 2015

போனஸ் கமிட்டி கூட்டம்




போனஸ் கமிட்டி கூட்டம் இன்று (10.02.2015) நடை பெற்றது. ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் தோழர் P. அபிமன்யு, பொது செயலர், BSNLEU மற்றும் தோழர் இஸ்லாம் அகமது, தலைவர் NFTEBSNL கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

கூடுதலாக BSNLEU அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர் சிங், துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி, BSNLEU சார்பாக கலந்து கொண்டனர். 

நிர்வாக தரப்பில் Sr.GM(SR), Sr.GM(Restg), GM(Estt), GM(EF) கலந்து கொண்டனர். கூட்டத்தில் நமது பொது செயலர் கீழ்க்கண்ட விசயங்களை எழுப்பினர். 

1. 27.06.2014 அன்று மனித வள இயக்குனர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 
எடுக்க பட்ட முடிவின்படி, போனஸ் கணக்கீட்டு அளவு என்பது, தேசிய அளவிலான நிறுவனத்தின் உற்பத்தி சம்மந்த பட்டதாக இருக்க வேண்டும். ஊழியர் செயல்பாடு அடிப்படையில் இருக்க கூடாது. நிர்வாகம் தவறாக சித்தரிக்க முயன்றதை சுட்டி காட்டினார். 

2. புதிய பார்மூலா ஊழியர்களக்கு மட்டுமா அல்லது அதிகாரிகளுக்கும் பொருந்துமா? 

3. Excellent அளவீடு மட்டும் இருக்க கூடாது. மாறாக, Fair, Good, Very Good இருக்க வேண்டும். 

4. மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்த கொள்ள பட வேண்டும் 

5. கூட்ட விவாத பொருள் அறிக்கையாக வெளியிட வேண்டும். 

ஆரோக்கியமான விவாதம் இருந்தது. அடுத்த கூட்டம் 12.03.2015 அன்று நடைபெறும். நமது கோரிக்கை மீதான தனது நிலைபாட்டை அடுத்த கூட்டத்தில் விளக்குவதாக நிர்வாகம் பதிலளித்தது.