Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, February 21, 2015

சேலம் மாவட்ட FORUM சார்பாக 14,602 கையெழுத்துக்கள் ஒப்படைப்பு




நமது மாவட்டத்தில் FORUM சார்பாக 30.01.2015க்கு பின் பெறப்பட்ட 14,602 கையெழுத்துக்கள் தமிழ் மாநில FORUM கன்வீனரிடம் 19.02.2015 அன்று 
ஒப்படைக்கப்பட்டது. 

சென்னை BSNLEU தமிழ் மாநில சங்க அலுவலகத்தில் FORUM அமைப்பின் மாநில கன்வீனர் 
தோழர் S. செல்லப்பாவிடம், சேலம் 
BSNLEU மாவட்ட தலைவர் 
தோழர் S. தமிழ்மணி  கையெழுத்து 
படிவங்களை வழங்கினார். 


BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் A. பாபுராதகிருஷ்ணன், மாநில பொருளர் தோழர் K. சீனிவாசன் உடன் இருந்தனர். சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சின்னசாமி, ஹரிஹரன், தங்கராஜ், சண்முகம், கிளை செயலர்கள் தோழர்கள் ராஜன், ராஜலிங்கம், செல்வம் மற்றும் முன்னணி தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். 

ஏற்கனவே 30.01.2015 அன்று 50,000 கையெழுத்துக்கள் கடலூரில் ஒப்படைத்தோம். ஆக மொத்தம் 64,602 கையெழுத்துக்கள் நமது சேலம் மாவட்ட FORUM சார்பாக வழங்கியுள்ளோம். 


மாநில அளவில் நமது சேலம் மாவட்ட FORUM தான் அதிக பட்ச கையெழுத்துக்கள் வழங்கி முதலிடத்தில் இருப்பதாக மாநில கன்வீனர் தோழர் S. செல்லப்பா, பெருமையுடன் கூறி பாராட்டினார். 

இந்த மகத்தான சாதனை படைக்க உதவிய 
சேலம்  மாவட்ட FORUM தலைவர்கள், 
அனைத்து சங்க மாவட்ட செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் அனைவருக்கும் FORUM தனது 
நன்றியை உரித்தாக்குகிறது. 

நமது மாவட்ட அளவில் அதிகப்படியான கையெழுத்துக்களை  வழங்கிய நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கிளைகளை மனதார பாராட்டுகிறோம். 

தோழமையுடன்,
E. கோபால், 
கன்வீனர், FORUM மற்றும்
மாவட்ட செயலர் BSNLEU