ராசிபுரம் கிளையின் மூத்த தோழர் N. சின்னதுரை, TM அவர்கள் 28.02.2015 அன்று பணி ஓய்வு பெற்றார். தோழருக்கு ராசிபுரம் பகுதி ஊழியர்கள், அதிகாரிகள் இணைந்து விரிவான பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
கோட்ட அதிகாரி திரு ஷண்முகம் விழாவிற்க்கு தலைமை தாங்கினார். தோழர் R. கோவிந்தராஜூ, கிளை செயலர் BSNLEU அனைவரையும் வரவேற்றார்.
உட்கோட்ட அதிகாரிகள் திருவாளர்கள் செல்வராஜூ, ராமலிங்கம், பரமசிவம், முருகன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால், தோழரின் இயக்க பணிகளை நினைவு கூர்ந்து சிறப்புரை வழங்கினார்.
BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், தங்கராஜூ, செல்வராஜூ, கொண்டலாம்பட்டி கிளை செயலர் தோழர் செல்வம், NFTEBSNL நிர்வாகிகள் தோழர்கள் அருள்மணி, பாலசுப்ரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தோழர் சின்னதுரை அவர்களின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய தோழமை வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்