Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 10, 2015

சர்வதேச மகளிர் தின சிறப்பு கூட்டம் - நாமக்கல்



07.03.2015 அன்று நாமக்கலில், சர்வதேச மகளிர் தின சிறப்பு கூட்டம் நடை பெற்றது. கூட்டதிற்க்கு நாமக்கல் நகர கிளை தலைவர் தோழர் V. கோபால், தலைமை தங்கினார். 

கூட்டத்திற்க்கு வந்திருந்த அனைவரையும் தோழர் ராமசாமி, நகர கிளை செயலர் வரவேற்றார். 

சிறப்பு கூட்டத்தை நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழியர் பிரேமலதா, துவக்கி வைத்து நல்ல பல கருத்துககளை வழங்கினார். கூட்டத்தில் நாமக்கல் உட்கோட்ட அதிகாரி திருமதி. கோகிலம், கலந்து கொண்டு பெண்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை விளக்கி பேசினார். 

BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சண்முகம், தங்கராஜூ, கனகராஜூ, ஹரிஹரன், வாழ்த்துரை வழங்கினர். 

இறுதியாக BSNLEU மாநில உதவி செயலர் தோழர் S. தமிழ்மணி சிறப்புரை வழங்கினார். 

கூட்டத்தை தோழர் அங்குராஜ், கிளை செயலர் நாமக்கல் ஊரகம் நன்றி கூறி முடித்து வைத்தார்.