Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, March 14, 2015

பி.எப். நிதியை பங்குசந்தையில் முதலீடு செய்வதா? போராட்டம் நடத்திட சிஐடியு அழைப்பு


தொழிலாளர்களின் சொத்தான அவர்களின் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடுசெய்யும் பாஜக அரசின் முடிவைஎதிர்த்துஅனைத்து தொழிற்சங்கங் களும் நாடு தழுவிய போராட்டம் நடத்த வேண்டுமென்று சிஐடியு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:மத்திய நிதி அமைச்சகம் கண்டனத்திற்குரிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.

அந்த திட்டத்தின்படி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை ஊக வணிகமான பங்குச் சந்தையில் முதலீடு செய் வதாக முடிவெடுத் துள்ளது. இது ஏற்கனவே மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் அமைப்பு முதலீட்டுத் திட்டத்தை பாதியளவு திருத்திவைப்பு நிதியிலிருந்து 5 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரைபங்குச் சந்தையில் முதலீடு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2ம்தேதியன்று நிதி அமைச்சகமானது பங்குச் சந்தையில் 5லிருந்து 15 விழுக்காடு முதலீடுசெய்வது எனவும் 5 விழுக்காடுவரை ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கான அறக்கட்டளைகளில் முதலீடுசெய்வதென முதலீட்டு திட்டம் திருத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையில் அமைச்சர் பேசும்போது, தொழிலாளர்களின் வைப்பு நிதியிலிருந்து 6000கோடி வரை எடுத்து மூத்த குடிமக்களுக்கு நலத்திட் டங்கள் என்ற பெயரில் செலவழிப்பது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்களின் சொத்து ஆகும்.அவை தொழிலாளர்களுக்கு திருப்பித் தரப்பட வேண்டிய பணமாகும். இதை எடுத்து நலத்திட்டங்களுக்கு செலவழிப்பது ஆபத்தானதாகும்.

எனவே பாஜக அரசின் இத்தகைய திட்டத்தை எதிர்த்து நாடு தழுவியஅளவில் அனைத்து தொழிற்சங்கங்களும் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு சிஐடியு அறிக் கையில் கூறியுள்ளது.