Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 19, 2015

மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம்


18.03.2015 அன்று மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. கூட்டதிற்க்கு தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமை தங்கினார். 

தோழர் A. சார்லஸ் பிரேம் குமார் மாவட்ட அமைப்பு செயலர், அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் தலைமை உரை நிகழ்த்திய பின், மாவட்ட செயலர் ஆய்படு பொருளை விளக்கி பேசினார். 16 நிர்வாகிகள் விவாதத்தில் பங்கேற்றனர். 

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

1. கையெழுத்து இயக்கத்தில் நமது இலக்கை அடைய FORUM அமைப்பின் மூலம் முயற்சித்து, 29.03.2015 க்குள் முடிப்பது. நமது கிளைகளுக்கு அதுபோக தனியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

2. விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை 29.3.2015 அன்று ஓமலூரில் மூப்பெரும் விழாவாக நடத்துவது. 

3.2015 ஏப்ரல் 21,22 வேலை நிறுத்தத்தை மாவட்ட FORUM ஆலோசனைப்படி வெற்றிகரமாக்குவது. 

4. அனைத்து கிளைகளிலும் அமைப்பு தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, சக்திக்கேற்ப, சமூக நல உதவிகள் புரிவது. 

5. வேலை நிறுத்த ஆயுத்த ஏற்பாடாக முதலில் அனைத்து கிளைகளிலும் நமது கிளை கூட்டத்தை உடனடியாக நடத்துவது, பொறுப்பு மாவட்ட நிர்வாகிகள் அதை உத்தரவாதப்படுத்துவது.

மேற்கண்ட முடிவுகளை கிளைகள் வெற்றிகரமாக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன். 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்