ஆத்தூர் கிளையின் முன்னணி தோழர் V. பாஸ்கரன், TM., NWOP., அவர்கள் 28.02.2015 அன்று பணி நிறைவு செய்தார். தோழருக்கு ஆத்தூர் பகுதியின் அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து நல்ல ஒரு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
28.02.2015 அன்று மாலை ஆத்தூர் தொலைபேசி நிலையத்தில் கூட்டம் சிறப்பாக நடை பெற்றது. ஆத்தூர் உட் கோட்ட அதிகாரி திரு. நாகராஜன் தலைமை தாங்கினார். துணை போது மேலாளர் (ஓய்வு) திரு. கணேசன், உட்கோட்ட அதிகாரிகள் திருவாளர்கள் குருசாமி, ராஜு, BSNLEU மாவட்ட உதவி தலைவர் தோழர் சின்னசாமி, NFTEBSNL கிளை தலைவர் தோழர் முத்துசாமி முன்னிலை வகித்தனர்.
BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் ஹரிஹரன், NFTEBSNL மாவட்ட சங்க நிர்வாகி
தோழர் வீரப்பன், தோழர்கள் ராஜமாணிக்கம்,
ஜெயபிரகாஷ்,(BSNLEU), அமிர்தலீங்கம் (NFTEBSNL) உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்தி பேசினர். இறுதியாக தோழர் அண்ணாதுரை (NFTEBSNL) நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.