திருச்செங்கோடு நகரம் மற்றும் ஊரக கிளைகள் சார்பாக BSNLEU அமைப்பு தின சிறப்பு கூட்டம் 21.03.2015 அன்று நடை பெற்றது.
கூட்டத்திற்க்கு கிளை தலைவர் தோழர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
முதல் நிகழ்வாக சங்க கொடி ஏற்றப்பட்டது. வேலூர் ரோடு பழைய தொலைபேசி நிலையத்தில் தோழர் G விஜய்ஆனந்த், மாவட்ட உதவி பொருளர், ஏற்றி வைத்தார். பள்ளிப்பாளையம் ரோடு புதிய தொலைபேசி நிலையத்தில் தோழர் S ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
தோழர் K.ராஜன், கிளை செயலர் ஊரகம், அனைவரையும் வரவேற்றார். தோழர் P. தங்கராஜ், M. ஷண்முகம், G. விஜய் ஆனந்த், S. ஹரிஹரன் மாவட்ட சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை
வழங்கினார்கள். TNTCWU மாவட்ட செயலர் தோழர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார்.
தோழர் E. கோபால், மாவட்ட செயலர், அமைப்பு தின சிறப்புகள், இன்றைய BSNL நிலை, FORUM போராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை விளக்கி பேசினார்.
இறுதியாக தோழர் S. தமிழ்மணி, மாநில உதவி செயலர்,சிறப்புரை வழங்கினார்.
தோழர் M. ராஜாலிங்கம், கிளை செயலர் நகரம் நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்