Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 24, 2015

அமைப்பு தினம் - சமூக நல பணிகளில் - ராசிபுரம் கிளை



15 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு ராசிபுரம் கிளை சார்பாக கொடியேற்ற நிகழ்வும், சமூக நல பணியும் சிறப்பாக நடைபெற்றது. 

ராசிபுரத்தில் இயங்கி வரும் ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகத்தில் 22.03.2015 அன்று சுமார் 110 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கபட்டது. 

நமது தோழர்கள் குழந்தைகளுக்கு உணவு பரிமாறியது, காப்பக நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.  

நிகழ்சியில் மாவட்ட உதவி தலைவர் தோழர் செல்வராஜ், கிளை செயலர் தோழர் கோவிந்தராஜூ, கிளை தலைவர் தோழர் மாதேஸ்வரன், தோழர் P. M. ராஜேந்திரன் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக, தொலைபேசி நிலையத்தில் சங்க கோடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. ராசிபுரம் கிளை சங்கத்தை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. அவர்களின் சமூக நல பணி தொடர தோழமை வாழ்த்துக்கள். 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்