BSNLலில் அங்கீகரிக்கப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு மாற்றலில் இருந்து விதிவிலக்கு அளித்து BSNL நிர்வாகம் ஏற்கனவே உத்திரவிட்டிருந்தது.
அதில் கூடுதல் திருத்தங்கள் செய்து 13/03/2015 அன்று மீண்டும் ஒரு உத்திரவு வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் . . .
1. அங்கீகரிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் சங்கங்களின் செயலர்,உதவிச்செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
2. அங்கீகார காலமான 25/04/2013 முதல் 24/04/2016 வரை இந்த விலக்கு அளிக்கப்படும்.
3. மேற்கண்ட சலுகை அகில இந்திய சங்கம் , மாநிலம் மற்றும் மாவட்டச்சங்கங்களுக்கு பொருந்தும்,. கிளைகளுக்கு இச்சலுகை இல்லை.
4. சங்கம் மாறினாலும் இச்சலுகையை ஒரு முறை மட்டுமே அனுபவிக்க முடியும். மாற்று சங்கங்களுக்கு சென்று மறுபடியும் இச்சலுகையை அனுபவிக்க முடியாது.
5. மாவட்ட மட்டத்தில் ஒரு முறை அனுபவித்தால் மறுமுறை மாநில அளவில்தான் சலுகையை அனுபவிக்க இயலும்.
6. அதிகாரிகள் சங்கங்களுக்கான மாற்றல் விதிவிலக்கு உத்திரவில் மேற்கண்ட சலுகை அங்கீகார காலம் முழுமையும் செல்லும் என நிர்வாகம் கூறியிருந்தது. தற்போது இது ஊழியர் சங்கங்களுக்கும் பொருந்தும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. . . .